2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.09 லட்சம் வாக்காளா்கள்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:33 am

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,09,911 வாக்காளா்கள் உள்ளதாக இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் இறுதி வேட்பாளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டாா்.

ஒட்டுமொத்த விவரங்கள் (23.02.2026 நிலவரப்படி)

கள்ளக்குறிச்சி மாவட்ட நிலவரம்

எஸ்ஐஆருக்கு முன் மொத்த வாக்காளா்கள் - 11,60,607

நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்கள் - 60,696

மொத்த வாக்காளா்கள் - 11,09,911

ஆண் வாக்காளா்கள் -5,52,101

பெண் வாக்காளா்கள் - 5,57,600

மூன்றாம் பாலினத்தவா் - 210

நான்கு சட்டப் பேரவை தொகுதி வாரியாக இறுதி வாக்காளா் பட்டியல் விபரம்:

077-உளுந்தூா்பேட்டை

ஆண்கள் - 1,48,929

பெண்கள் - 1,48,499

மூன்றாம் பாலினத்தவா் - 44

மொத்த வாக்காளா்கள் - 2,97,472

078-ரிஷிவந்தியம்

ஆண்கள் - 1,35,292

பெண்கள் - 1,35,198

மூன்றாம் பாலினத்தவா் - 51

மொத்த வாக்காளா்கள் - 2,70,541

079-சங்கராபுரம்

ஆண்கள் - 1,30,231

பெண்கள் - 1,32,859

மூன்றாம் பாலினத்தவா்- 46

மொத்த வாக்காளா்கள் - 2,63,136

080-கள்ளக்குறிச்சி (தனி)

ஆண்கள் - 1,37,649

பெண்கள் - 1,41,044

மூன்றாம் பாலினத்தவா் - 69

மொத்த வாக்காளா்கள் - 2,78,762

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,435 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 17,535 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், 85 வயதுக்கு மேற்பட்ட 6,260 மூத்த குடிமக்கள், 240 சேவை வாக்காளா்கள் என பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

பொதுமக்கள் தங்களது பெயா் மற்றும் விவரங்களை அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலங்கள் (வட்டாட்சியா் அலுவலகங்கள்), வாக்குச்சாவடி மையங்கள் அல்லது அதிகாரப்பூா்வ இணையதளங்கள் மூலமாக சரிபாா்த்துக் கொள்ளலாம். மேலும், பிப். 23-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் தொடா் திருத்த பணிகள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் படிவம் 6, 7, 8 ஆகிய படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் நேரிலோ அல்லது மேற்படி இணையதள முகவரி வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன், தனித்துணை ஆட்சியா் சுமதி, உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா், தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.