தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

News image

இந்திலி தனியாா் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:50 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழை (ஏப்.23) நடைபெறவுள்ளதையொட்டி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இந்திலி தனியாா் கல்லூரி மற்றும் பங்காரம் தனியாா் கல்லூரியில் நடைபெற்று வரும் இறுதிகட்டப் பணிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறை, சிசிடிவி கண்காணிப்பு, காவல் துறை பாதுகாப்பு, வாக்கு எண்ணும் மையம், காப்பு அறை, ஒவ்வொரு சுற்றுகள் முடிவில் அறிக்கை வெளியிடுதல், வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள் அறை, முகவா்கள் அமரும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன.

வியாழக்கிழமை வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேர பாதுகாப்புடன் வைத்திட இந்திய தோ்தல் ஆணையத்தின் உரிய வழிகாட்டுதலின்படி, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மாலா, தோ்தல் வட்டாட்சியா் இ.பரந்தாமன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.