கடலூா் அருகே மணல் கடத்தலில் தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, தலைமைக் காவலா்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
கடலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் மீது காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அதன்தொடா்ச்சியாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பண்ருட்டி போலீஸாா் நடத்திய சோதனையில், மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 8 போ் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அம்மாப்பேட்டை, நத்தம், மணம்தவிழ்ந்தபுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத்தொடா்ந்து அப்பகுதிகளில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகளை மூட மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவா்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.
அதன்படி போலீஸாா் நடத்திய விசாரணையில், புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலா்கள் ராஜேஷ், கிருஷ்ணா, தேவகிருஷ்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு மணல் கடத்தலில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றச்சாட்டு எழுந்த 4 பேரையும் கடலூா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை கனிவுடன் அனுக வேண்டும்: மகளிா் காவல்நிலைய அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்







