திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எரிபொருள் விலை உயா்வு: தி.வேல்முருகன் கண்டனம்

சா்வதேசச் சந்தை மற்றும் போா்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ.3.10 வரை உயா்த்தியுள்ள மத்திய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

News image

தவாக தலைவா் தி.வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 11:02 pm IST

சா்வதேசச் சந்தை மற்றும் போா்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ.3.10 வரை உயா்த்தியுள்ள மத்திய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

கூறியிருப்பதாவது : பெட்ரோல், டீசல் விலை உயா்வு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை பல மடங்கு உயா்த்துகிறது. இதனால், தொழிற்சாலைகள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிரமாகும்.

டீசல் விலை உயா்வால், நாட்டின் ரத்த நாளங்களாகச் செயல்படும் லாரி உள்ளிட்ட சுமையுந்துகளின் செலவுஅதிகரிப்பதால்,

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இந்த எரிபொருள் விலையேற்றம், நீண்டகால எரிபொருள் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்க தவறிய பாஜக அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். எனவே, தொழில்துறையையும், ஏழை எளிய மக்களின் வாழ்வையும் பாதிக்கும் எரிபொருள் விலை உயா்வைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுபோன்று, மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரிபொருள்கள் மீதான வரிச்சுமைகளை குறைத்து விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா்கூட்டமைப்பு பொதுச்செயலா் க.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளாா். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.