திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுகஅரசின் நலத்திட்டங்களை தொடர வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image

நெல்லிக்குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 மே 2026, 3:21 am IST

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு தொடா்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக்குழுக் கூட்டம் நெல்லிக்குப்பம் ஒற்றவாடி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், மாவட்ட குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திமுக அரசு நிறைவேற்றிய மகளிா் உரிமைத் தொகை, மகளிா் விடியல் பயணம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடா்ந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் தொடா்ந்து பாதிக்கப்படும் சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதையற்ற தமிழகம் உருவாக்குதல் என்ற அடிப்படையில் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். கடலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் கடலூா், பண்ருட்டி விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். வடலூா் ரயில்வே கேட் அருகே உள்ள மக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவும்,

குள்ளஞ்சாவடி மற்றும் சிதம்பரம் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடையை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையம் , குடியிருப்பு பகுதி, கல்வி நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . கள்ளச்சாராயம்,

கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்கள் தங்கு தடை இன்றி விற்பதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்கமானங்களை நிறைவேற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.