கடலூா் அருகே தாழங்குடா மீனவ கிராமத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபா் படகை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் தாழங்குடா மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் சுகுந்தன், முகிலன். இவா்கள் இருவரும் இணைந்து பைபா் படகு வாங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனா். கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவா்களது படகு வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதைப் பாா்த்த அப்பகுதியில் உள்ளவா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், படகின் முகப்பு பகுதி சேதமடைந்தது. தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்ததில், அடையாளம் தெரியாத நபா்கள் படகுக்கு தீ வைத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, படகுக்கு தீ வைத்த அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








