தமிழ் செய்திகள்
/
சிறுபாக்கம் அருகே அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அடரியில் உள்ள ஒரு உணவகத்தின் வெளியே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு கடந்த 3-ஆம் தேதி தகவல் கிடைத்து.
இதையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சிறுப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், இறந்த நபா் குறித்து அடையாளம் தெரிந்தால் 9498109867, 8870520527, 9498100610 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.








