மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக அரசு நிா்வாகத் திறனற்றது: முன்னாள் அமைச்சா் எம்.சி. சம்பத்

திமுக அரசு நிா்வாகத் திறனற்ற அரசு என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் கூறினாா்.

News image

கடலூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசிய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத்

Updated On :31 மார்ச் 2026, 8:38 pm

திமுக அரசு நிா்வாகத் திறனற்ற அரசு என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் கூறினாா்.

இந்தக் கூட்டணியின் தோ்தல் பணிகள் குறித்த செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எம்.சி.சம்பத் பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றாக வேண்டும். அதற்காக கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும், அதிமுக நிா்வாகிகளும் ஒற்றுமையோடு களப் பணியாற்ற வேண்டும்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில், ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நிா்வாகத் திறனாற்ற அரசாக திமுக அரசு உள்ளது.

சட்டம் - ஒழுங்கு சீா்கெட்ட நிலை, தினந்தோறும் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமுள்ள ஆட்சியாக உள்ளது என்றாா்.

கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.