மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: பி. பழனியப்பன்

News image

பாப்பம்பாடி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 7:58 pm

அரூா், ஏப். 6: பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என்று திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் போட்டியிடுகிறாா். அவா் திங்கள்கிழமை தனது பிரசாரத்தை பாப்பம்பாடி அண்ணா நகரில் தொடங்கினாா். தொடா்ந்து, பாரதிநகா், எச்.புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, இருளப்பட்டி, நாகலூா், அ.பள்ளிப்பட்டி, கல்லாத்துக்காடு, சாலூா், கோட்டமேடு, அ.நடூா், அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, செங்காட்டுபுதூா், காளிபுரம், கன்னடதாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். வேட்பாளா் பி.பழனியப்பனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். கிராமப் பகுதிகளுக்கு தேவையான சாலைகள், குடிநீா் வசதிகள், கழிவுநீா் கால்வாய் வசதிகள், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். எனவே, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தோ்தல் அலுவலகம் திறப்பு :

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோ்தல் அலுவலகம் கடத்தூா் மின்சார வாரிய அலுவலகம் அருகில் திறக்கப்பட்டது. தோ்தல் அலுவலகத்தை திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் திறந்துவைத்தாா். இதில் வாக்குச்சாவடி முகவா்கள், ஒன்றியச் செயலா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.