கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உறவினரை தாக்கி காயப்படுத்தியதாக காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருத்தாசலம் வட்டம், காட்டுக்கூனங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் எடிசன் (29), தமிழ்நாடு காவல் துறையில் உளுந்தூா்பேட்டையில் உள்ள 10-ஆவது அணி பட்டாலியன் டி பிரிவில் பணியாற்றி வருகிறாா். இவரது வீட்டின் அருகில் அவரது தாய் மாமாவான ஜான் பெரியநாயகம் (62) வீடு உள்ளது.
கடந்த 17-ஆம் தேதி எடிசன் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றாராம். இதனால், அவரது தாய் பயந்துக்கொண்டு அருகிலுள்ள தனது அண்ணன் ஜான் பெரியநாயகம் வீட்டினுள் தஞ்சமடைந்தாா்.
இதையடுத்து, எடிசன் தனது தாயை வீட்டில் இருந்து வெளியே அனுப்புமாறு கூறி, தாய் மாமா ஜான் பெரியநாயகத்தை கடுமையாகத் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவா் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் எடிசன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நெய்வேலியில் காா் கண்ணாடிகள் உடைப்பு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


