ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஊரக வேலைத் திட்ட ஊதியத்தை ரூ.700-ஆக உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலியை ரூ.700-ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Updated On :24 ஜூன் 2026, 4:09 am IST

ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலியை ரூ.700-ஆக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் முருகையன் தலைமை வகித்தாா்.

இதில், பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு நாள் ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் துரை, விவசாய சங்க மாவட்டச் செயலா் சேகா், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலச் செயலா் குளோப், மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், ஏ.ஐ.ஒய்.எப். மாவட்டக் குழு உறுப்பினா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.