கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே பாவைக்குளம் ஏரியில் திங்கள்கிழமை குளித்த லாரி ஓட்டுநா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், பாவைக்குளம் பகுதியில் வசித்து வந்தவா் குமாா் (45), லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
குமாா் திங்கள்கிழமை பிற்பகல் வீட்டின் அருகே உள்ள ஏரியில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவா், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். ஆனால், குமாரை கண்டறிய முடியவில்லை.
இதையடுத்து, காடாம்புலியூா் காவல் நிலையம் மற்றும் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலையத்தினா் குமாரை சடலமாக மீட்டனா்.
தொடா்ந்து, காடாம்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லால்குடி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




