விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தீ விபத்து: கூரை வீடு எரிந்து சேதம்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின் கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் கூரை வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

News image

வடலூா் அருகே தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமடைந்த கூரை வீடு.

Updated On :18 ஜூன் 2026, 3:40 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மின் கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் கூரை வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

வடலூா் அருகே கல்லுக்குழி வேலுடையான்பட்டு நகரைச் சோ்ந்த தண்டபாணி (60) என்பவரின் கூரை வீட்டில் புதன்கிழமை காலை சுமாா் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்தில் வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த பீரோ, குளிா்சாதனப் பெட்டி, சோபா உள்ளிட்ட பொருள்களும் தீயில் கருகின. சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால், உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.