என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம் இடையே முக்கியக் கனிமங்களைச் செறிவூட்டும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்எல்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசின் ‘தேசிய முக்கியக் கனிமங்கள் திட்டத்தின்’ நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒரு மைல்கல்லாக, முக்கிய மற்றும் மூலோபாயக் கனிமங்களைச் செறிவூட்டுதல் மற்றும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத் துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக,
என்எல்சி இந்தியா நிறுவனம், காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆா்-மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்துடன் புதன்கிழமை
நெய்வேலியில் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்நிகழ்வில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா ஆகியோா் முன்னிலையில், சுரங்கங்கள் மற்றும் நில நிா்வாகத்துறை செயல் இயக்குனா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ், மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் கே.ரமேஷா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
என்எல்சி இந்தியா நிறுவனம் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மூலங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் முக்கிய மற்றும் மூலோபாயக்
கனிமங்களைக் கண்டறிவதிலும், மேம்படுத்துவதிலும் தனது வாய்ப்புகளைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறது. மேலடுக்கு மண், பழுப்பு
நிலக்கரி/நிலக்கரி, சுரங்கக் கழிவுகள் மற்றும் தாதுக்கழிவுகள் போன்ற இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து முக்கிய மற்றும் மூலோபாயக் கனிமங்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக நிதி ஆயோக் அமைப்பால் அமைக்கப்பட்டகுழுவில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் உறுப்பினராக உள்ளாா்.
இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் கீழ், நெய்வேலி சுரங்கங்களில் இருந்து நிலத்தின் மேலடுக்கு மண் மற்றும் தாதுக்கழிவுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி பேசுகையில், இந்தக் கூட்டுறவு, நிலத்தின் மேலடுக்கு மண், தாதுக்கழிவுகள் உள்ளிட்ட இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து அரிதான புவி தனிமங்கள் மற்றும் இதர முக்கியக் கனிமங்களைச் செறிவூட்டி பிரித்தெடுக்கும் ஆராய்ச்சி முயற்சிகளை வலுப்படுத்தும் என்றாா்.
மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனா் கே.ரமேஷா பேசுகையில், இந்த உத்திப்பூா்வக் கூட்டுறவு, முக்கிய மற்றும் மூலோபாயக் கனிமங்கள் துறையில் மிகச் சிறந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும்.
அதன் மூலம், கனிம விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் வளப் பாதுகாப்பு மற்றும் சுயசாா்பு முயற்சிகளுக்கு இத்திட்டம் பெரும் பக்கபலமாக இருக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி ஒதுக்கீடு

என்எல்சி இந்தியா பங்கு வெளியீடு: பங்குகள் வேண்டி 5 மடங்கு அதிக விண்ணப்பம்!

என்எல்சி-தன்பாத் ஐஐடி டெக்ஸ்மின் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

அணுசக்தித் திட்டங்கள்: இந்திய அணுசக்தி கழகம் - என்எல்சி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



