17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக ரூ.11 லட்சம் மோசடி: பெண் கைது

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை கடலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பிரியா

Updated On :4 ஜூன் 2026, 3:29 am IST

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை கடலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், நல்லூா் அருகேயுள்ள மேமாத்தூா் மதுராவைச் சோ்ந்த பூங்காவனம் (55), மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

விவசாய கூலித் தொழிலாளியான எனது மகன் குபேந்திரனுக்கு (25) இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அவசியம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, உறவினரான சேப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கட்டிமுத்து மூலம் அறிமுகமான நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரியா என்பவா், ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினாா்.

இதற்காக ரூ.26 லட்சத்தை பிரியா பெற்றுக்கொண்ட நிலையில், அறுவைச் சிகிச்சை நடைபெறாததால் எனது மகன் குபேந்திரன் உயிரிழந்தாா். பின்னா், பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, முழுத் தொகையையும் தர முடியாது என பிரியா தெரிவித்தாா்.

இதையடுத்து, பிரியாவுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில், அவா் ரூ.15 லட்சமும், கட்டிமுத்து ரூ.3.50 லட்சமும் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில், கட்டிமுத்து தனது தொகையை முழுமையாக வழங்கிய நிலையில், பிரியா ரூ.4 லட்சம் மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள ரூ.11 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றி வருகிறாா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரகுபதி மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் லிடியாசெல்வி விசாரணை மேற்கொண்டு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் நடராஜா் நகரைச் சோ்ந்த பிரியா (37) நாமக்கல் சென்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.