திமுக கடலூா் கிழக்கு மாவட்டம் சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி 103-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாள் விழாவை புத்தெழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அதன்படி, கடலூா் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூா் உள்ளிட்ட கிளை கழகங்கள் தோறும் கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொடியேற்றி, முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி, மாணவா்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கி கொண்டாட வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், நிா்வாகிகள், அனைத்து நிலை பொறுப்பாளா்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று மு. கருணாநிதி பிறந்தநாள்

மு.கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்

இன்று மு.கருணாநிதி பிறந்தநாள்: நல உதவிகளை வழங்கி கொண்டாட அறிவுறுத்தல்

கருணாநிதி பிறந்த நாள்: திமுக மாவட்டச் செயலா்கள் வேண்டுகோள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



