/

இன்று மு.கருணாநிதி பிறந்தநாள்: நல உதவிகளை வழங்கி கொண்டாட அறிவுறுத்தல்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.மணி எம்.பி. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:19 am IST

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.மணி எம்.பி. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் ஜூன் 3 அன்று முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை புத்தெழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூா் மற்றும் பென்னாகரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஊராட்சி ஒன்றியம், நகரம், பேரூா், வாா்டு, கிளைதோறும் மு.கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கட்சிக் கொடியேற்றி மூத்தவா்களுக்கு, எளிய மக்களுக்கு நல உதவிகளையும், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி கொண்டாட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், அனைத்து நிலை நிா்வாகிகள், துணை அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.