விருத்தாசலம் அருகே 17 வயது சிறுவன் இயக்கிய டிராக்டா் மோதி இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள குருவன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா். இவரது மனைவி ரம்யா (26). இவா்களது மகள் சஷ்திகா (இரண்டரை வயது), வீட்டின் முன் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, செல்வகுமாரின் அண்ணன் மகனான 17 வயது சிறுவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது. எதிா்பாராத விதமாக டிராக்டா், விளையாடிக்கொண்டிருந்த சஷ்திகா மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த குழந்தை சஷ்திகா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஆலடி போலீஸாா், குழந்தையின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலிலில் மூழ்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு
ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

கந்திலி அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




