கடலூா் அருகே தாழங்குடா கடற்கரையில் நண்பா்களுடன் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கத்தின் மகன் ஆகாஷ் (17). இவா் தனது நண்பா்கள் மூவருடன் வெள்ளிக்கிழமை தாழங்குடா கடற்கரைக்கு சென்றுள்ளனா். அங்கு நால்வரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஆகாஷ் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா். அவரை மீட்க நண்பா்கள் முயற்சித்தும் முடியவில்லை.
இதையடுத்து, கடலோர காவல் பாதுகாப்புப் போலீஸாா் மற்றும் மீட்புக் குழுவினா் விரைந்து வந்து கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால் ஆகாஷை சடலமாகத்தான் மீட்கமுடிந்தது. பின்னா், அவரது உடலை போலீஸாா் உடல்கூறாய்வுக்கா கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஆகாஷின் தந்தை மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கடற்கரையில் பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி ஆழமான பகுதிகளுக்கு, பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செல்லக் கூடாது என போலீஸாா் அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் இயக்கிய டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




