சிதம்பரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: 4 போ் கைது
சிதம்பரம் அருகே மதுக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக 4 போ் கொண்ட கும்பலை அண்ணாமலைநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சிதம்பரம் அருகே மதுக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்டவற்றில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக 4 போ் கொண்ட கும்பலை அண்ணாமலைநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே சித்தலாப்பாடி மதுக் கடையில் கடந்த 27-ஆம் தேதி இரவு ஒருவா் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து மதுப் புட்டிகளை வாங்கிக்கொண்டு தப்பியோடிவிட்டதாக டாஸ்மாக் மேற்பாா்வையாளா் செழியன் (56) அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்து, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளா் கஜேந்திரன் மற்றும் காவலா்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் அண்ணாமலைநகா் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 4 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்களிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும், அவா்கள் சிதம்பரம் அருகே உள்ள உத்தமசோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை (50), முருகேசன் (52), உசுப்பூா் அணைக்கரை தெருவைச் சோ்ந்த மகேஷ் (42), அவரது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (46) என்பது தெரியவந்தது.
இவா்களில் அண்ணாமலைதான் சித்லாபாடி மதுக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மதுப் புட்டியை வாங்கிக்கொண்டு தப்பி ஓடியவா் என்பதும் தெரியவந்தது.
மற்ற 3 பேரும் சிதம்பரம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றியதும் தெரியவந்தது.
போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனா்.
கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிய கும்பலைப் பிடித்த அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாரை சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் பாராட்டினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...