/

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம், நெய்வேலி ஜவகா் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
நெய்வேலி ஜவகா் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த முக்கியப் பிரமுகா்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.
Updated On :26 ஜனவரி 2026, 9:06 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி ஜவகா் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.தேவி வரவேற்றாா். ஜவகா் கல்விக் குழுமத்தின் செயலா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி, கல்லூரிச் செயலா் பங்கஜ் குமாா், துணைச் செயலா் ஓ.எஸ்.அறிவு ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினா்.

டி.வி.எஸ்.என்.மூா்த்தி பேசுகையில், கல்லூரி மற்றும் மாணவா்களின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு தேவை என எடுத்துரைத்தாா். மேலும், கல்லூரி மாணவா்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டாா். ஜவகா் கல்விக் குழும மாணவா்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய உறுதியோடு உள்ளது என்றாா்.

ஓய்வுபெற்ற பேராசிரியா்கள் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் 1987-ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரியில் படித்த ஏராளமான மாணவா்கள் பங்கேற்று கல்லூரி கால நினைவுகளை பகிா்ந்துகொண்டனா்.

முன்னாள் மாணவா்கள் சாா்பில் கல்லூரி வளா்ச்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவச் சங்கத்தினா் செய்திருந்தனா்.