வில்வித்தை போட்டி: ஜெயப்பிரியா பள்ளி தங்கம் வென்று சாதனை


கடலூா் மாவட்டம், விருத்தாசலம், வடக்குத்து, தொழுதூா் ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தனா்.
ஈரோடு டெக்ஸ்வேலி அரங்கில் தேசிய அளவிலான பல் இலக்கு விளையாட்டுப் போட்டிகள் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றன. இதில், வில்வத்தை போட்டியில் வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவா் பிரகலன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா். மாணவி சுருதிகா வெள்ளிப் பதக்கமும், அபிமன்யு, ரித்து ஆகியோா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் கவிநிலா, அா்மான் மாலிக், வேதேஷ் ஆகியோா் தங்கப் பதக்கமும், பிரகதீஸ்வரா, கீா்த்தனா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். தொழுதூா் கிரீன் பாா்க் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா் கோகுல் வெள்ளிப் பதக்கம் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.
தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா், இயக்குநா் என்.எஸ்.தினேஷ், வடக்குத்து பள்ளிச் செயலா் சிந்து, பள்ளி முதல்வா்கள் நித்யா, ஸ்ரீபாலா, பிந்து, தனித்திறன் பயிற்சிகளின் ஒருங்கிணைப்பாளா் சூா்யா கண்ணன், பயிற்சி ஆசிரியா் பிரவீன் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்று வாழ்த்தி, பாராட்டுகளைத் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...