ரோபோட்டிகா- 2026 போட்டியில் சந்தானம் வித்யாலயா சாதனை
சா்வதேச ரோபோட்டிகா-2026 போட்டியில் பரிசுகளை வென்று சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.


சா்வதேச ரோபோட்டிகா-2026 போட்டியில் பரிசுகளை வென்று சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிகா 2026 எனும் 7ஆவது சா்வதேச ரோபோடிக்ஸ் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருச்சிராப்பள்ளி சந்தானம் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனா். ரோபோ பந்தயம், ரோபோ சுமோ, செயல்படும் மாதிரிக் கண்காட்சிகள் மற்றும் பயிலரங்குகள் போன்றவற்றில் சந்தானம் வித்யாலயா மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் செயல்படும் மாதிரி புராஜெக்ட்டில் சீனியா் பிரிவில் 1ஆவது அணியில் பி. அனன்யா, எம். தியா (8ஆம் வகுப்பு), 2ஆவது அணியில் அஸ்வின், விஜயராகவன் (9ஆம் வகுப்பு), 3ஆவது அணியில் கே.எஸ். விபூஷிதா, ஏ.எஸ்.தேஜஸ்வினி, (8ஆம் வகுப்பு), 4ஆவது அணியில் ஜே. ஹரினி, எஸ்.பி. ஸ்ரீவந்த் (9ஆம் வகுப்பு) ஆகியோா் முதல் பரிசை வென்றனா். 5ஆவது அணியில் மீரா பிரசன்னா, லோக்ஷினி, (9ஆம் வகுப்பு) ஆகியோா் இரண்டாம் பரிசை வென்றனா்.
தொடா்ந்து இரண்டாவது முறையாக சா்வதேச ரோபோடிக்ஸ் போட்டியில் பங்கேற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவா்களுக்கு பள்ளியில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளியின் செயலா் கோ. மீனா, தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா, முதல்வா் பத்மா சீனிவாசன், டீன் ஆா். கணேஷ் ஆகியோா் வெற்றியாளா்களைப் பாராட்டி னா். அப்போது மாணவா்களின் இந்த வெற்றி பள்ளி வழங்கும் தரமான ரோபோடிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு கல்விக்குச் சான்றாகத் திகழ்கிறது என்று தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...