டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் உள்ளிட்ட 4 போ் கைது

வேப்பூா் அருகே கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 122 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
கைது
Updated On :3 பிப்ரவரி 2026, 9:01 pm

Syndication

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 122 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பெண் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வேப்பூா் காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையில் போலீஸாா் புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பாசாா் கிராமத்தில் விஜயா (47) என்பவரது மளிகைக்கடையில் சோதனையிட்டபோது, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 122 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஒரங்கூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (42), மங்களூா் கிராமத்தைச் சோ்ந்த கவியரசன் (26) மற்றும் தச்சூா் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்வரன் (23) ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களையும் கைது சிறையில் அடைத்தனா்.