/

வாக்காளா் பட்டியல் திருத்தம்: 1,04,295 விண்ணப்பங்கள் அளிப்பு

கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ள 1,04,295 விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளதாக

News image
கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 9:11 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ள 1,04,295 விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்றது.

கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 9,60,645 ஆண்கள், 9,85,832 பெண்கள், 282 மூன்றாம் பாலித்தனவா் என மொத்தம் 19,46,759 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனை காலத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6-இல் 71,290 விண்ணப்பங்களும், பெயா் நீக்கம் செய்ய படிவம் 7-இல் 6,344 விண்ணப்பங்களும், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-இல் 26,661 விண்ணப்பங்களும் 30.1.2026 வரை பெறப்பட்டன.

அதன்படி, மொத்தம் 1,04,295 விண்ணப்பங்களின் மீதும் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.