/

பெரம்பலூரில் இதுவரை 26 ஆயிரம் வாக்காளா் பட்டியல் திருத்த விண்ணப்பங்கள்!

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்காக 26,297 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்காக 26,297 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதற்குப் பிறகு, சிறப்பு வாக்காளா் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தலுக்காக 6,963 விண்ணப்பங்களும், திருத்தம் செய்வதற்காக 5,869 விண்ணப்பங்களும், நீக்கம் செய்வதற்காக 2,834 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இதேபோல, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தலுக்காக 5,656 விண்ணப்பங்களும், திருத்தம் செய்வதற்கு 4,183 விண்ணப்பங்களும், நீக்கம் செய்வதற்கு 790 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இம் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தலுக்காக 12,619 விண்ணப்பங்களும், திருத்தம் செய்வதற்கு 10,052 விண்ணப்பங்களும், நீக்கம் செய்வதற்கு 3,624 விண்ணப்பங்களும் என மொத்தம் 26,297 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.