ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹஜ் ஆய்வாளா்களை சவூதிக்கு அனுப்பும் பணிக்கு அரசு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம்

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

ஹஜ் 2027 புனிதப் பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக, மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கான பணிக்கு தகுதியான அரசு ஊழியா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஹஜ் 2027 புனிதப் பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக, மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கான பணிக்கு தகுதியான அரசு ஊழியா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணிக்காலம் 2027 ஏப்ரல் 3 முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை சுமாா் இரு மாதங்கள் ஆகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதியான அலுவலா்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளா்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.

சவூதி அரேபியாவில் மாநில ஹஜ் ஆய்வாளா்களாக பணியாற்றும் காலம், அவா்களது பணிக்காலமாகக் கருதப்படும். விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, இதர தகுதிகள் மற்றும் நியமன நடைமுறைகள் குறித்த விவரங்களை இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆக.27-ஆம் தேதி கடைசி நாளாகும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.