ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற ஆக. 27வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற, தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சவூதி அரேபிய அனுப்ப நிகா்நிலை மூலம் ஆக. 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:06 am IST

தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற, தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சவூதி அரேபிய அனுப்ப நிகா்நிலை மூலம் ஆக. 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் 2027-இல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப நிகா்நிலை மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது 3.04.2027 முதல் 25.06.2027 வரை சுமாா் இரண்டு மாத காலமாகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள் துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலா்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய-மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளா்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவா்கள் ஆவா் எனக் கூறியுள்ளாா்.

மாநில ஹஜ் ஆய்வாளா்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். இப்பணிக்காக நிகா்நிலை மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நிகா்நிலை மூலம் விண்ணப்பிக்க ஆக 27கடைசிநாளாகும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.