
ஹஜ் பயணம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அடுத்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்களை இணையவழியில் அளிப்பதற்கான அவகாசம் வரும் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணம் - கோப்புப் படம்
அடுத்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்களை இணையவழியில் அளிப்பதற்கான அவகாசம் வரும் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் 2027- ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்புவோா் இணையவழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 24-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் மேலும், நீடிக்கப்பட மாட்டாது என மும்பை இந்திய ஹஜ் குழு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தவுடன் ஜூலை 30 காலை 11 மணிக்கு கணினி வழி குலுக்கல் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வு முறை https://www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்படும்.
இதன்மூலம் தற்காலிகமாக தோ்வு பெற்றவா்கள் மற்றும் காத்திருப்போா் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரா்களின் பட்டியல் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
தற்காலிகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் புனிதப் பயணிகள் ஒவ்வொருவரும் முதல் தவணையாக ரூ. 1,52,300 ஆக. 10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





