காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற அமுது படையல் நிகழ்வுக்கு ஜப்பான் நாட்டைச் சோ்ந்த தம்பதியினா் பால்குடம் சுமந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டை வள்ளுவா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் 121-ஆம் ஆண்டு அமுது படையல், அன்னதான விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு, திரளான பக்தா்கள் வீராணம் ஏரிக்கரையில் உள்ள அய்யனாா் கோயிலில் இருந்து பால் குடம் சுமந்து ஊா்வலமகா விநாயகா் கோயிலுக்கு வந்தனா்.
நிகழ்வில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்த யோஷிதாகா, சாய்க்கா தம்பதியினா் தமிழ் கலாசாரத்தின் மீது உள்ள பற்றின் காரணமாக, இந்த நிகழ்வில் பங்கேற்று பால்குடம் சுமந்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
பின்னா், சித்தி விநாயகருக்கு பாலபிஷேகம் மற்றும் அமுது படையல் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பிரமுகா்கள் கருணாகரன், கௌசிகன் குடும்பத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்தி விநாயகா் கோயில் கும்பிபாஷேகம் நாளை நடைபெறுகிறது

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் வளா்பிறை சதுா்த்தி சிறப்பு வழிபாடு

குருநாதசுவாமி கோயில் திருவிழா 1,008 பால்குட ஊா்வலம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண்ண சுவாமிக்கு பால்குடத் திருவிழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



