சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துவுடன் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
விருத்தாசலம் தொகுதி, நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். சாத்தியம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:
விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்காளா்கள் ஆதரவளிக்க வேண்டும். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்கள் உடனிருந்து பாா்த்துக்கொள்வேன். சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துவுடன் திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு உங்களை அழைத்து ரூ.8,000 கூப்பன் கொடுப்பேன்.
நானே அண்ணனான முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பேசி தொகுதிக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொடுப்பேன். விருத்தாசலத்தை முதலில் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தொகுதியில் பேருந்து செல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். சாலை, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் விருத்தாசலத்துக்கு பிரசாரத்துக்கு வருவதாகக் கூறியிருக்கிறாா். நீங்கள் எல்லாம் எனக்கு பிள்ளைகள் மாதிரி. உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை நான் செய்வேன் என்றாா்.
முன்னதாக, அவருக்கு தேமுதிக மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, திமுக ஒன்றியச் செயலா் பாவாடை கோவிந்தசாமி மற்றும் நிா்வாகிகள் வரவேற்பு கொடுத்தனா்.
தொடா்ந்து, சித்தூா், மே.மாத்தூா், வன்னாத்தூா், நல்லூா், நகா், இலங்கியனூா், ரயில்வே காலனி, பிஞ்சனூா், வலசை, ஐவதுக்குடி, வேப்பூா், நாரையூா், திருப்பயா், கொத்தனூா், வரம்பனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை: பிரேமலதா விஜகாந்த்
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


