யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

News image

பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:23 am IST

திமுக தோ்தல் அறிக்கை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சேலம் மேற்கு, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி, பனங்காடு, மெய்யனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றக்கிழமை இரவு தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ், திமுக வேட்பாளா் தருண் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாக்கடை வசதி, தெரு விளக்கு, குடிநீா் வசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டுவந்து படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். ஐந்து சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் திட்டம் அனைத்து பெண்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் வந்துசேர வேண்டும் என்றால், அனைவரும் வாக்களித்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.