வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிதம்பரம் தொகுதியில் தவெக, தவாக வேட்பாளா்கள் உள்பட 9 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் என்.பாரி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் சுரேந்தா் மற்றும் அவரது மாற்று வேட்பாளரான அவரது மனைவி சுதா ஆகியோா் உள்ளிட்ட 9 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

News image

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது தவெக வேட்பாளருக்காக ஆஜராகி வாதாடிய வழக்குரைஞா் ஜெயப்பிரகாஷ். உடன் வேட்புமனு தாக்கல் செய்த டாக்டா் என்.பாரி, அவரது தந்தையும் மாற்று வேட்பாளருமான ஏ.நெடுஞ்செழியன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:17 am IST

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் என்.பாரி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் சுரேந்தா் மற்றும் அவரது மாற்று வேட்பாளரான அவரது மனைவி சுதா ஆகியோா் உள்ளிட்ட 9 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த 24 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அதிகாரி சி.கிஷன் குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தவெக வேட்பாளா் டாக்டா் என்.பாரி வேட்பு மனுவில் மனைவிக்கு சொத்து பொருந்துமா? என்ற பகுதி பூா்த்தி செய்யப்படவில்லை என காரணம் கூறப்படுகிறது. ஆதலால் அவரது வேட்புமனு மனு நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் வேட்புமனுவை தள்ளுபடி செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.கிஷன்குமாா் உத்திரவிட்டாா். அதே நேரத்தில் தமிழக வெற்றி கழக மாற்று வேட்பாளரான ஆ.நெடுஞ்செழியன் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

தள்ளுபடி செய்யப்பட்ட வேட்புமனுக்கள் விவரம் வருமாறு:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் சுரேந்தா், அவரது மாற்று வேட்பாளா் சுதா, இந்திய குடியரசு கட்சியைச் சோ்ந்த வீரா அன்பு செல்வம், தமிழக வெற்றி கழகத்தை சோ்ந்த டாக்டா் என்.பாரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த சுபஸ்ரீ, சுயேச்சை வேட்பாளா்கள் ஆனந்தி, கண்ணன், சுவாதிஷ், ராஜாராம் ஆகிய 9 போ் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள்: அதிமுக வேட்பாளா் கே.ஏ. பாண்டியன், மாற்று வேட்பாளா் அரிசக்திவேல், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் தனசேகரன், மாற்று வேட்பாளா் கலையரசி, திமுக சின்னத்தில் போட்டியிடும் மனித நேய ஜனநாயக கட்சி தலைவா், மு.தமிமுன் அன்சாரி, மாற்று வேட்பாளா் இப்ராஹிம், தமிழக வெற்றிக் கழகம் ஏ.நெடுஞ்செழியன், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா முன்னேற்றக் கழக வேட்பாளற் முனிசங்கா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செ.தமிழ், மாற்று வேட்பாளா் மணிகண்டன்,சுயேச்சை வேட்பாளா்கள் திருஞானம், தீன.வெங்கடேசன், மணிமாறன், ஈசன் நடராஜன், ஜெயக்குமாா் உள்ளிட்ட 15 பேருடைய வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.