வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சிதம்பரத்தில் ஜி.ஆர். மூப்பனார் பிறந்தநாள் விழா 

சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை ஜி.கே.வாசன் நற்பணி இயக்கம் சார்பில் மறைந்த த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் ஜி ஆர் மூப்பனார் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:48 pm

DIN

சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை ஜி.கே.வாசன் நற்பணி இயக்கம் சார்பில் மறைந்த த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் ஜி ஆர் மூப்பனார் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் மந்தகரையிலுள்ள மூப்பனார் பேரவை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  மறைந்த ஜிஆர் மூப்பனார் உருவ படத்திற்கு
மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா  மாலை அணிவித்தார். 

நிகழ்ச்சியில் நகர மூத்த துணைத்தலைவர் ஆர்.சம்மந்த மூர்த்தி,  மாநில அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு துணைத் தலைவர்  எம்.ஜி.ராஜராஜன், நகர த.மா.கா பொதுச் செயலாளர்கள் ஆட்டோ டி.குமார்,  டி.பட்டாபிராமன், ஜி.கே.வாசன் நற்பணி இயக்க நிறுவனர் எஸ்.முத்துக்குமார், மாநில மருத்துவ பிரிவு மண்டல செயலாளர் டாக்டர் ஆர். வீரவேல், சிறுபான்மை பிரிவு ஸ்டீபன் முத்துப்பாண்டி
வாசன் நற்பணி இயக்க செயலாளர்கள்  பி.செல்வகுமார், எஸ். செந்தில்குமார்  ஆகியோர் அப்பகுதியை சர்ந்த  25 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்களை வழங்கினர். 

விழாவில் த.மா.கா மற்றும் வாசன் நற்பணி இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் ஏ.ராஜசேகர், ரகு, ஜெயச்சந்திரன், விக்கி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

படவிளக்கம்- சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை சார்பில் ஜி.ஆர்.மூப்பனார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.