விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், கோவடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எ. பெரியண்ணன் (54). இவா் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம். இந் நிலையில், கடந்த 16-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெரியண்ணன் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.
இதைத் தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியண்ணன், சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









