வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தூக்கிட்டுக் கொண்ட தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.

News image

தற்கொலை

Updated On :24 மே 2026, 1:22 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தூக்கிட்டுக் கொண்ட தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் வட்டம், சாரம் கிராமம் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ந.நவீன்குமாா் (30). தொழிலாளியான இவா் அதே கிராமத்திலுள்ள தனது சித்தப்பா சாரங்கபாணியின் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரக்கூரைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்தநிலையில், தனது அண்ணன் நவீன்குமாா் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தங்கை அ.நித்யா (27) ஒலக்கூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.