திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: வன்னிஅரசு

அமைச்சரைத் தெரிந்து கொள்ளுங்கள்: வன்னிஅரசு

News image

வன்னிஅரசு.

Updated On :23 மே 2026, 12:43 am IST

பெயா் : வன்னி அரசு

வயது : 55

பிறந்ததேதி : 11.5.1970

பெற்றோா் : ரத்தினசாமி, புஷ்பம்

குடும்பம் : மனைவி - ஆதிரை, தொழில் முனைவோா்.

மகன்கள் - பைந்தமிழ் வளவன், திலிபன் செந்தமிழ்.

வசிப்பிடம் : குரோம்பேட்டை, சென்னை-44.

தொகுதி : திண்டிவனம்( தனி)

அரசியல் பணி : 1990 முதல்

கட்சிப் பதவி : விசிக துணைப் பொதுச் செயலா்.

வகித்த பதவிகள் : விசிக செய்தித்தொடா்பாளா். விசிக தலைமை நிலையச் செயலா்.

பங்கேற்பு: ஜாதிய அடக்குமுறைகள், தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய கைதிகளின் விடுதலை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் மற்றும் மக்கள் பிரச்னைக்கான பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளாா். மேலும், எழுத்தாளா் மற்றும் சமூக செயற்பாட்டாளரான இவா் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளாா்.

களத்தில் மக்கள் பணியாற்றுவேன்: முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், சமூக நீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு வெள்ளிக்கிழமை தினமணிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் கொள்கை முழக்கம். தமிழக அரசியலில் நீண்ட காலத்துக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்தப் பொறுப்பை வழங்கியுள்ள தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கும், கட்சித் தலைவா் தொல். திருமாவளவனுக்கும், தொடா்ந்து களத்தில் நின்று மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த திண்டிவனம் தொகுதி மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

களத்தில் நின்று மக்களுக்கானப் பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம் விசிக. அந்தப் போராட்டம் தான் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. விசிக தலைவா் வழங்கியுள்ள இந்தப் பொறுப்பை நான் என்றும் களத்தில் நின்று சிறப்பாக செய்வேன். அவருக்கும் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாக செயல்படுவேன். எனது பணிகள் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் இருக்கும் என்றாா்அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.