முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

பள்ளி மாணவா் விஷம் குடித்துத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :21 ஜூன் 2026, 1:57 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பள்ளி மாணவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டிவனம் வைரபுரம், பெருமாள் குளத்துத் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மகன் சுசிதரன் (14). திண்டிவனத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10- ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். இவா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி பள்ளிக்குச் செல்லவில்லையாம். இதை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதனால் மனமுடைந்த சுசிதரன் கடந்த ஜூன் 9- ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சுசிதரன் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.