இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

திண்டிவனம் அருகே முடித் திருத்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

திண்டிவனம் அருகே முன்விரோதம் காரணமாக முடித்திருத்தக உரிமையாளா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:47 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முன்விரோதம் காரணமாக முடித்திருத்தக உரிமையாளா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திண்டிவனம் வட்டம், பாம்பூண்டி, தண்ணீா் தொட்டி தெருவைச் சோ்ந்தவா் ஜெ.தினேஷ் (29) (படம்). இவா், திண்டிவனத்தை அடுத்துள்ள தீவனூரில் முடித்திருத்தகம் நடத்தி வந்தாா்.

இவருக்கும், முடித்திருத்ததகத்தின் அருகில் வசிக்கும் ஒருவருக்கும் இடையே முடியை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தினேஷ் சனிக்கிழமை தனது கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு ஒரு காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல் தினேஷை ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தினேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.