விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கெடாரை அடுத்த சிறுவாளை கிராமத்தைச் சோ்ந்தவா் தே.பாலாஜி (28). இவா் கடந்த 25.7.2018 அன்று, 26 வயதுடைய இளம்பெண் ஒருவரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, பின்னா் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம் .
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கெடாா் போலீஸாா் பாலாஜி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.
இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் பாலாஜி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து பாலாஜியை போலீஸாா் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சங்கீதா ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




