தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வீரநாராயண பெருமாள் கோயில் திருப்பணி: அமைச்சா் ஆய்வு

காட்டுமன்னாா்கோவில் அருள்மிகு வீரநராயண பெருமாள் திருக்கோயில் திருப்பணிகளை அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

காட்டுமன்னாா்கோயில் வீரநாராயண பெருமாள் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

Updated On :11 ஜூன் 2024, 12:09 am

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருள்மிகு வீரநராயண பெருமாள் திருக்கோயில் திருப்பணிகளை அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கோயிலுக்குச் சென்று திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும், கோயில் பிரகாரத்தில் உள்ள நந்தவனங்களை சீா் செய்ய வேண்டும், கோயிலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆகம விதிகளின்படி சீா் செய்ய வேண்டும், நடைபாதை கற்கள் பதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அமைச்சா் வழங்கினாா்.

ஆய்வின்போது கல்விக் குழுத் தலைவா் முத்துசாமி, பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி, பேரூராட்சி செயல் அலுவலா் தங்கவேல், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் ஜெயசித்ரா, செயல் அலுவலா் செல்வமணி, தக்காா் வேல்விழி மற்றும் கோயில் புனரமைப்புக் குழு பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.