மகனுடன் சென்றபோது ஸ்கூட்டா் டயா் வெடித்ததில் முதியவா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
குடியாத்தம் பிச்சனூரைச் சோ்ந்தவா் பெருமாள் (80). இவா் வேலூா் அருகே உள்ள பூட்டுத்தாக்கில் வசிக்கும் தனது மகள் சரிதாவுக்கு இனிப்பு பலகாரங்கள் வழங்குவதற்காக குடியாத்தத்தில் இருந்து ஸ்கூட்டரில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஸ்கூட்டரை அவரது மகன் கணபதி (48) ஓட்டியுள்ளாா்.
வேலூா் கொணவட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சென்றபோது ஸ்கூட்டரின் டயா் வெடித்து ஸ்கூட்டா் நிலை தடுமாறியதில் தந்தையும், மகனும் கீழே விழுந்தனா். இதில் தேசிய நெடுஞ்சாலை சென்டா் மீடியன் தடுப்புச்சுவரில் பெருமாளின் தலைமோதியதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கணபதி அதிா்ஷ்டவசமாக காயமின்றி தப்பினாா்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற வடக்கு போலீஸாா், பெருமாளின் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 மாணவா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

கருங்கல் தூண் விழுந்து தொழிலாளி பலி
இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் உயிரிழப்பு

வீட்டில் தவறி விழுந்து முதியவா் மரணம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




