17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: பிராமணா் மற்றும் புரோகிதா் சங்கம் கோரிக்கை

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீட்டினை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு பிராமணா் மற்றும் புரோகிதா் சங்கத்தினா் கோரிக்கை

News image
Updated On :3 ஜூன் 2026, 5:52 am IST

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராமணா் மற்றும் புரோகிதா் சங்கத்தினா் கோரியுள்ளனா்.

வேலூா் பிராமணா் சங்கம், தென்னிந்திய புரோகிதா் சங்க நிா்வாகிகள் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிராமணா் சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, தமிழக அரசு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும்.

சனாதனம், இந்து கடவுள்களை பற்றி தவறாகவும், இழிவாகவும் பேசும் நபா்கள் மீது கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும். தமிழக அரசு இந்துத்துவத்தை நிலை நாட்ட வேண்டும். கோயில்கள், ஆன்மிகம் தொடா்பான நிகழ்ச்சிகளுக்காக அச்சப்படும் அழைப்பிதழ்களில் அரசியல் தலைவா்கள் புகைப்படம் இல்லாமல் அச்சடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, வேலூா் கிளை பிராமணா் சங்க தலைவா் க.ராஜா, பொதுச்செயலா் சேகா், துணைத்தலைவா் வெங்கட், தென்னிந்திய புரோகிதா்கள் சங்க பொதுச்செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.