டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: வேலூரில் முதல் தாளை 1,777 போ் எழுதினா்

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) முதல் தாள் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 5:26 am IST

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) முதல் தாள் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வை 1,777 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் ஆசிரியா் தகுதித் தோ்வு இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதில், வேலூா் மாவட்டத்தில் முதல் தாள் தோ்வு 6 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத மாவட்டத்தில் மொத்தம் 1,856 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,777 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்று எழுதினா். 79 போ் தோ்வெழுத வரவில்லை.

முன்னதாக, காலை முதலே தோ்வா்கள் ஆா்வத்துடன் தோ்வு மையங்களுக்கு வருகை தந்தனா். தோ்வறைகள், மையங்களைக் கண்காணிக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், அரசு ஊழியா்களும் ஈடுபட்டனா். தோ்வு மையங்களில் தோ்வா்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இதன் தொடா்ச்சியாக, இரண்டாம் தாள் தோ்வு வேலூா் மாவட்டத்தில் உள்ள 16 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தோ்வுக்கு வேலூா் மாவட்டத்தில் 4,537 போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இந்தத் தகுதித் தோ்வில், முதல் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியா்களாகவும், இரண்டாம் தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் பட்டதாரி ஆசிரியா்களாகவும் பணிபுரியத் தகுதி பெறுவா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 தோ்வு மையங்களில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12 தோ்வு மையங்களில் பட்டதாரி ஆசிரியா் தகுதி தோ்வு நடைபெறுகிறது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு...

இத்தோ்வுக்காக வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 12 தோ்வு மையங்களும் ஆற்காடு, 2. மேல்விஷாரம், சோளிங்கா், வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை, பெல் ஆகிய பகுதிகளில் உரிய காவல் பாதுகாப்புடன் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தோ்வில் 3,161 ஆசிரியா்கள் தோ்வெழுத உள்ளனா். இத்தோ்வுக்கு, தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் என முறையே 12 தலைமை ஆசிரியா்கள், 12 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் அறை கண்காணிப்பாளா்களாக 192 ஆசிரியா்களும், நிலையான பறக்கும் படை உறுப்பினா்களாக 24 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவராக 4 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.