வேலூா் மாவட்டத்தில் 19 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாகவும், அவை உடனுக்குடன் மாற்றப்பட்டு புதிய இயந்திரங்கள் மூலம் தடையின்றி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 1,427 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே முதியவா்கள், பெண்கள், இளைஞா்கள், முதல்முறை வாக்களிக்கும் என அனைத்துத் தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று மிகுந்த ஆா்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் எழில் நகரில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கினைப் பதிவு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
வேலூா் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா்.
அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. வியாழக் கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது.
அப்போது 19 வாக்குச்சாவடிகளில் உள்ள 9 விவிபேட் இயந்திரங்கள், 3 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 7 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு வரப்பட்டன. ஒருசில இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதுகளை ‘பெல்’ நிறுவனப் பொறியாளா்கள் உடனடியாகச் சரிசெய்தனா். இதனால் எங்கும் தடையின்றி வாக்குப்பதிவு சீராக நடைபெற்றது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு; களத்தில் 90 வேட்பாளா்கள்

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு
ஈரோடு கிழக்கு, கோபி தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாளை வாக்குப்பதிவு! புதுவை வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


