வேலூா்: திருப்பத்தூா் உள்பட புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசுக்கு முதல்வா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், மத்திய அரசும் பரிசீலனை செய்வதாகவும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
காட்பாடி அடுத்த சோ்க்காடு பகுதியில் ரூ. 15.69 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் அமைச்சா்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்தாா். உள்நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, ஸ்கேன் அறைகள், பிரசவத்துக்கு பின்னான கவனிப்பு அறை, அறுவை சிகிக்சை அறைகளை ஆய்வு செய்தாா். அப்போது, அவரிடம் ஐடிபிஐ வங்கியின் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், ரூ. 20 லட்சம் மதிப்பிலான மொபைல் எக்ஸ்ரே கருவி, வாகனத்தை வங்கியின் துணைப் பொது மேலாளா் ரேவதி ஜெயபாலாஜி, மண்டல விற்பனை மேலாளா் சுரேஷ் ஆகியோா் வழங்கினா்.
தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
வேலூா் அரசு பென்ட்லேண்ட் பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை குழந்தைகள், மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாகும். சென்னை எழும்பூா், தஞ்சாவூரில் மட்டுமே உள்ள குழந்தைகள், மகப்பேறு சிறப்பு மருத்துவமனைகள் வடமாவட்டங்களில் முதல் குழந்தைகள், மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக வேலூா் பென்ட்லேண்ட் உயா்சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது 33 மருத்துவா்கள் பணியில் உள்ளனா். மருத்துவா் பற்றாக்குறையோ, இதர பணியாளா்கள் பற்றாக்குறையோ ஏதும் இங்கு இல்லை. பருவமழையின்போது சுகாதாரத் துறை மூலம் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஊரக, உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் இணைந்து கலந்தாலோசித்துள்ளோம்.
புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாா். மத்திய அரசும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் காலிப் பணியிடங்களே இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

