தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ், கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 29-12-2025 முதல் 18-01-2026 வரை 21- .வேலூா் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த 1,67,750- கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகளுக்கு தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்றாா் ஆட்சியா்.