லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

|92 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சேத்துப்பட்டு பஸ் நிலையம் திறக்கப்படுமா?

ஆரணி, செப். 3: சேத்துப்பட்டில் |92 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம்(படம்) விரைவாகத் திறக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  சேத்துப்பட்டு பேரூராட்சியில் சிமென்ட் ஷீட்டால் அ

Updated On :20 செப்டம்பர் 2012, 5:15 pm

ஆரணி, செப். 3: சேத்துப்பட்டில்

|92 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் நிலையம்(படம்) விரைவாகத் திறக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 சேத்துப்பட்டு பேரூராட்சியில் சிமென்ட் ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனால் இங்கு பஸ்கள் நிற்காமல், செஞ்சி சாலையில் நின்று வந்தன.

 மாவட்ட நிர்வாகம் உத்தரவிடும்போது, பஸ் நிலையத்தில் சில நாள்கள் மட்டும் இங்கு பஸ்கள் நின்று செல்லும். பின்னர் பழைய நிலையே தொடர்ந்து வந்தது.

 இதையடுத்து, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என தமிழக அரசு மற்றும் உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் வலியுறுத்தினார்.

 இதையடுத்து, கடந்த ஆண்டு இங்கு பஸ் நிலையம் கட்ட |30 லட்சத்தை தமிழக அரசு வழங்கியது. பின்னர் பேரூராட்சி நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, |92 லட்சத்தில் பஸ் நிலையமும் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று, சில மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

  இதுகுறித்து எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன் கேட்டபோது, பஸ் நிலையம் திறப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.