ஆரணி, அக். 2: திருவண்ணாமலை மாவட்டத்தில், பட்டுக்குப் பெயர் போன ஆரணியில் விசைத்தறிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கைத்தறி நெசவாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், சேலம் ஆகிய பகுதிகளில், விசைத்தறிகள் மூலம் பட்டுச் சேலைகள் நெய்யப்படுதால் பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
1985-ம் ஆண்டுக்கு முன்பு, பட்டுச்சேலைகளில் 33 ரகங்களை விசைத்தறி மூலம் நெய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.
பின்னர் 22 ரகங்களையும், அண்மையில் கடப்புட்டா, போடி, பூஜா உள்ளிட்ட 11 ரகங்களையும் கண்டிப்பாக விசைத்தறி மூலம் நெய்யக்கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டது.
கைத்தறி நெசவாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலும், விசைத்தறி மூலம் பட்டுப்புடவை நெய்பவர்கள் காட்டன் 60 சதவீதம், பாலியஸ்டர் 40 சதவீதம் இணைத்து நெய்ய வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது.
இதுதவிர, உல்லன் 60 சதவீதம், காட்டன் 40 சதவீதம் இணைத்தும், பருத்தி 60 சதவீதம், காட்டன் 40 சதவீதம் இணைத்தும், பட்டுநூல் 60 சதவீதம், காட்டன் 40 சதவீதம் என்ற விகிதப்படி இணைத்து சேலைகள் நெய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், ஆரணியில் தடை செய்யப்பட்ட பட்டுச் சேலை ரகங்கள் தொடர்ந்து விசைத்தறி மூலம் நெய்யப்படுவதால் கைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால்,பலர் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விசைத்தறி உரிமையாளர்கள் கூறும்போது, "ஆரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எங்களால் கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. விசைத்தறி மூலம் பட்டுச் சேலைகளை நெய்யவில்லை என்றால் தமிழ்நாட்டின் பட்டுசேலைக்கான சந்தைத் தேவையை ஈடுசெய்ய முடியாது. மேலும் விலையும் அதிகமாகும்' என்கின்றனர்.கைத்தறி பட்டுச் சேலை விற்பனையாளர்கள் இதனை மறுக்கின்றனர். ஆரணி பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி பட்டுச் சேலை உற்பத்தியால், கைத்தறி பட்டுச் சேலை விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. எங்களுக்கும் சரிவர வேலை இல்லாமல் போகிறது.
தொடர்ச்சியாக வேலை கிடைக்கும் என்றால் கைத்தறி பட்டுச் சேலைக்கு தட்டுப்பாடே இருக்காது. விசைத்தறி பட்டுச் சேலையை கைத்தறி பட்டுச் சேலையாக விற்பது தடுக்கப்பட வேண்டும்.
கைத்தறி மூலம் ஒரு பட்டுச் சேலை நெய்வதற்கு 2 முதல் 3 நாட்கள் ஆகிறது. ஆனால், விசைத்தறி மூலம் நாள் ஒன்றுக்கு 2 பட்டுச் சேலைகளை தயாரிக்கலாம்.
ஆரணியில் கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் நெய்யப்பட்ட இரு வகையான சேலைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறி மூலம் தயாரித்து, அதைக் குறைந்த விலைக்கு விற்பதால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது."ஆரணி பட்டுச் சேலை' என்ற முத்திரைப் பெயருக்கும் பங்கம் ஏற்படுகிறது என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

