திருவண்ணாமலை, ஜூன் 29: கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஆதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகருகே கழிவறையும், சத்துணவு சமையல் கூடமும் அமைந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கலசப்பாக்கம் ஒன்றியத்தின் முக்கிய ஊர்களில் ஒன்றாக ஆதமங்கலம் புதூர் விளங்குகிறது. போளூரில் இருந்து மேல்சோழங்குப்பம் செல்லும் சாலையில் உள்ள இவ்வூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
ஆதமங்கலம்புதூரைச் சுற்றி மேல்சோழங்குப்பம், பேட்டை, வில்வாரணி, காந்தாரபாளையம், சீராம்பாளையம், கிடாம்பாளையம், நவாப்பாளையம், சாலமேடு, கேட்டவரம்பாளையம், கெங்கமகாதேவி, கட்டவரம் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 1967-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இப்பள்ளியில் தற்போது 24 ஆசிரியர்களும், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர்.
ஆனால் இப்பள்ளியில் முறையான குடிநீர், கழிப்பிட வசதி இல்லை. ஆசிரியர்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் திறந்தவெளி மைதானத்தையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கழிவறை அருகிலேயே சத்துணவு சமையல் கூடம் உள்ளது. கழிவறை தொட்டியில் உள்ள தண்ணீரையே பாத்திரங்கள் கழுவ பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 7 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
போதிய ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்டவை இப்பள்ளிக்கு அவசரத் தேவை என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

